Editorial / 2022 ஜனவரி 10 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர், வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில், புதிய பல்பொருள் விற்பனை நிலையமொன்று, காரைதீவு பல்நோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகத் தலைவர் யோ. கோபிகாந்தின் தலைமையில் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி. தங்கவேல் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
மேலும், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிராந்திய அதிகாரிகள், அம்பாறை மாவட்ட ஏனைய கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்க இயக்குநர் சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago