2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது

Princiya Dixci   / 2021 ஜூலை 18 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர், நேற்றிரவு (17) கைது செய்துள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையில் 1,600 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞனையும் 1,300 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 26 இளைஞனையும் கைது செய்தனர்.

இதேவேளை, சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் ஆற்று மணல்  ஏற்றிச் சென்ற ஒருவரையும் நேற்றிரவு கைது செய்ததுடன், உழவு இயந்திரத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .