2023 ஜூன் 01, வியாழக்கிழமை

தேயிலைச் செடிகளுக்குள் விஷ பூச்சி

Freelancer   / 2023 மார்ச் 28 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மலையக பகுதிகளில் உள்ள தேயிலைச் செடிகளில் புது வகையான விஷ பூச்சி தோன்றியுள்ளது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நல்லத்தண்ணி, லக்ஷபான வாழமலை பிரிவில் இவ்வாறான விஷ பூச்சி உள்ளதென அத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தார்.

தோட்டத்தில் தேயிலை செடிகளை கவாத்து வெட்டி கொண்டு இருந்த போது, கையில் ஏதோ பூச்சி கடிப்பது போன்று உணர்ந்தேன். அப்போது வருத்தம் இல்லை. எனினும்,   தனது பணியை செய்து முடித்து வீட்டுக்குத் திரும்பியதன் பின்னர், அந்த இடத்தில் கடுமையாக அரிப்பு ஏற்பட்டது. உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டன. கைவைத்தியம் செய்தும் எவ்விதமான பலனும் இல்லையென பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

அதன்பின்னர், பாதிக்கப்பட்ட நபர் மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் முழுவதும் தடிப்பு அடையாளங்கள் உள்ளன. கடுமையான அரிப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகையால், தேயிலைச் செடிகளில் இருக்கும் இவ்வகையான பூச்சிகளையும் விஷஜந்துக்களையும் அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் வலியுறுத்தினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .