Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை
Janu / 2023 ஜூன் 04 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலானது ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சியையும் அவர் மீதான தாக்குதலையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் மக்கள் சந்திப்பில் அவர் ஈடுபட்டிருந்த போது அங்கு புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவதை நாம் இலங்கை அரசின் ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கின்றோம் என்றும் சிவஞானம் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் இவற்றை தடுக்க முன்வரவேண்டும். இவ்வாறு தமிழர் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் அரச புலனாய்வாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
8 hours ago
27 Sep 2023