Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 27 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
உள்ளூர் உற்பத்தி பொருட்களை, நாங்கள் அதிகமாகக் கொள்னவு செய்து பயன்படுத்துவதன் ஊடாக, தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் வடமாகான தொழிற்றுறை திணைக்களத்தின் வர்த்தக சந்தை வௌ்ளிக்கிழமை (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், தற்போது, உள்ளூர் உற்பத்தியாளர்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் உற்பத்தி சற்று அதிகரித்து காணப்படுகின்றது. நாங்கள் இவ்வாறான உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து பயன்படுத்துகின்ற போது, தொழில் முயற்சியாளர்களை மேலும் ஊக்குவிப்பதுடன், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திகளைத் தவிர்த்து சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும்.
கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண தொழில் துறை திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வர்த்தக சந்தை பசுமை பூங்கா வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நெசவு உற்பத்திகள், கைப்பணி, உணவு, சிறு கைத்தொழில் உற்பத்திகள் உள்ளடங்கிய 60க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களுடன் இந்த வர்த்தக சந்தை திறந்துவைக்கப்பட்டது.
52 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025