2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

’குஷ்பு அடம்பிடிப்பு’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 15 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகை குஷ்பு, கட்சியில் தனக்கு முக்கிய பதவி வேண்டுமென பாரதிய ஜனதா உயர்  தலைவர்களைச் சந்தித்து கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) கூட்டணியில் இடம்பெற்றிருந்த, பாரதிய ஜனதா கட்சி, 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் வெற்றி பெற்றது.

அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பும் ஒருவராக கருதப்பட்டார்.  தேர்தல் பிரசாரத்தின் போது, திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) வேட்பாளருக்கு கடும் போட்டியாகத் திகழ்ந்தார் குஷ்பு.

இதேவேளை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்புவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக, உளவுத்துறை டெல்லிக்கு தகவல் அனுப்பியது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஷ்புவை ஆதரித்து, சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்தி,வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருப்பினும், தி.மு.க., வேட்பாளரிடம் குஷ்பு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், குஷ்பு, சில தினங்களாக,டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் பாரதிய ஜனதா தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷன் ரெட்டி, முருகன் உள்ளிட்ட உயர் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.  கட்சியில் தனக்கு முக்கிய பதவி அளிக்குமாறு குஷ்பு வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .