Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருள் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பொருள்களை விற்பனை செய்யும் போது, நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது மற்றும் பொருள்களை பதுக்கி வைப்பது தொடர்பான பொதுமக்களால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பல களஞ்சியங்களில் அனுமதி பெறாமல் நெல் மூடைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
“அப்படியான வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன தெரிவித்தார்.
களஞ்சியத்தில் உள்ள பல ஆயிரம் நெல் மூடைகளை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு இதன்போது ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago
19 minute ago