2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

உணவில் விஷமா?

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 14 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்ரதுர்கா:

 பகல்நேர உணவை உண்ட பின்னர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இறந்த சம்பவமொன்று, சித்ரதுர்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர்கள் உண்ட உணவில் விஷம் கலந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,மேலும் இருவரின் நிலை   கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சித்ரதுர்கா மாவட்டம், பரமசாகரா தாலுகா, இஷாமுத்ரா கிராமத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு  குடும்பத்துடன் உணவு உண்டுள்ளனர்.

குடும்பத்திலுள்ளோர் உணவு உண்ட பின்னர்  திடீரென  வாந்தி எடுத்துள்ளனர். வாந்தியெடுத்த அச்சத்தில் அனைவரும் கூச்சலிட்டதால், பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்த போது, அவர்கள் வாயில் இருந்து  நுரை வந்ததை பார்த்தனர்.

உடனே, அருகிலுள்ள  மருத்துவமனைக்குச் கொண்டு சென்று அவர்களுக்கு  முதலுதவி  அளித்து விட்டு, சித்ரதுர்கா மாவட்ட அரசாங்க  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்த போது இருவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மற்றுமொருவர்  தாவணகரே அரசாங்க  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரும் நேற்று அதிகாலை இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட  பொலிஸார் தெரிவிக்கையில், ''விஷம் கலந்த உணவு சாப்பிட்டதால் மூன்று பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் உணவில் எப்படி விஷம் கலந்தது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்,'' என்றார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இறந்த சம்பவம், சித்ரதுர்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .