2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

”முல்கம்பொல அக்கா” விழுங்கியதால் சிக்கல்

Editorial   / 2023 ஜூன் 04 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விழுங்கிய “முல்கம்பொல அக்கா” கண்டி வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பிரிவின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அந்தப் பெண்ணை கைது செய்வதற்கான முயற்சியை மேற்கொண்ட போது, அந்தப் பெண், தன்னிடமிருந்த ஹெரோய்ன் போதைப்பொருள் உருண்டையை விழுங்கிவிட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த பெண் உள்பட இன்னும் சிலர், சனிக்கிழமை (03) அதிகாலை வேளையில், முல்கம்பொல பிரதேசத்தில் வாகனமொன்றுக்குள் இருந்து போதைப்பொருள் விற்பனைச் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிநவீன சொகுசு வாகனத்தின் உள்ளே இருந்துகொண்டு போதைப்பொருளை விற்பனைச் செய்துள்ளனர். அந்த வாகனத்தை சுற்றிவளைத்த போது, அப்பெண் தன்னிடமிருந்த ஹெரோய்ன் போதைப்பொருள் அடங்கிய உருண்டையை விழுங்கிவிட்டார்.

“முல்கம்பொல அக்கா” என்றழைக்கப்படும் 40 வயதான பெண்ணே இவ்வாறு விழுங்கியுள்ளார். அதன்பின்னர் அப்பெண்ணை கைது செய்த பொலிஸார். வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில்,கண்டி மேல் நீதிமன்றத்தால் அப்பெண் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தப் பெண் இருந்த நவீன ரக வாகனத்துக்குள் மேலும் மூவர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரிடமிருந்து 10 கிராம் ​ஹெரோய்ன், மற்றைய இருவரிடமிருந்தும் தலா ஐந்தரை கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி –பேராதனை வீதியில் முல்கம்பொலயில் பிரதான ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்கு இடையில், இந்த போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

ஷேன் செனவிரத்ன  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X