2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

தன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை

Ilango Bharathy   / 2021 ஜூலை 22 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

நாவற்குழி, தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவைச் சேர்ந்த  இராணுவச் சிப்பாய் ஒருவர்  இன்று அதிகாலை(22) படை முகாமில் கடமையிலிருந்த வேளை, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து10 மாதங்களே ஆகியுள்ள நிலையில், வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .