Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
A.K.M. Ramzy / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெலகாவி
கணவரின் தகாத நடவடிக்கையாலும், வரதட்சணை கொடுமை தாங்காமலும், நான்கு மாதக் கர்ப்பிணியான மனைவி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
பெலகாவி ஷஹாபுராவின் ஆளவனா கல்லி கிராமத்தில் வசிக்கும் 23வயது பெண் இவ்வாறு செய்துள்ளார்.
இவரின் கணவர், திருமணமான ஒரு மாதம் வரை நல்லவராக நாடகமாடியவரின் சுயரூபம், அதன்பின் வெளிச்சத்துக்கு வந்தது. தினமும் கஞ்சா உட்கொள்ளும் அவர், மனைவியை கொடுமைப்படுத்தினார். கர்ப்பிணி என்றும் பாராமல், தாய் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரும்படி அடித்து துன்புறுத்தினார். இதற்கிடையில் மனைவியின் தூரத்து உறவினர் பெண்ணுடன், கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தான். இது குறித்து கேள்வி எழுப்பிய மனைவியைத் தாக்கினார். மனம் நொந்த மனைவி, நேற்று காலை தூக்கிட்டு தனது உயரை மாய்த்துக் கொண்டார்.கணவனை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .