2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

உரப் பிரச்சினையால் தேயிலைத் தொழிற்றுறை நட்டம்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

 

அரசாங்கம் எடுத்த முடிவால் ஏற்பட்டுள்ள இரசாயன உரங்களுக்கான தட்டுப்பாட்டால், தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோரைப் போன்று , தோட்டத் தொழிலாளர்களும் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத சிக்கலான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று தேசிய பொறியியல் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான தொழில்சார் வல்லுநர்கள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் புலஸ்த்தி வன்னியாராச்சி தான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

..விவசாய விஞ்ஞான விற்பன்னர்கள் கூறுவது போன்று தேயிலை உற்பத்தி துறைக்கு 70% சேதனப் பசளை 30% அசேதனப் பசளைகளை வழங்காவிட்டால், குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தி குறைவடைந்து அந்தத் துறை வீழ்ச்சி காணும் என புலஸ்த்தி வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு விளைச்சல் குறைந்து உற்பத்தி பாதிக்கப்பட்டால் அதன் அழுத்தங்கள் நேரடியாக தோட்டங்களில் வாழும் அப்பாவி தொழிலாளிகள் மீதே சுமத்தப்படும். அன்றாடம் உழைப்பில் வாழ்ந்து நிதி சேமிப்பு என்ற ஒன்று இல்லாதவர்கள் என்பதனாலேயே. கொரோனா பெருந்தொற்றால் பொருளாதார ரீதியாக அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கடும் நிலைமையை புரிந்து கொண்டு விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமை என்றும் புலஸ்த்தி வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .