Niroshini / 2021 ஜூலை 29 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று (29) இரு கையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
யாழ், மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.
இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில், கொழும்புத்துறை, J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதே பிரிவைச் சேர்ந்த 66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையை காட்டுமாறு கூறி ஊசி போட்டுள்ளார்.
தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகவும் உடலில் உபாதை ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
6 minute ago
45 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago
57 minute ago
1 hours ago