Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 07 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது.
கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதில் ஓரளவு கண் பார்வை குறைவாக இருந்து சத்திரசிகிச்சை செய்த பின் முற்றாக பார்வை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தவிடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரட்னவிடம் வினவிய போது.
இவ்விடயம் உண்மை ,தேசிய வைத்தியசாலையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் செய்தி கொப்பி மருந்தை பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கல் காரணமாகும் என நினைக்கின்றோம் என்றார்.
தற்போது அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை செய்கிறோம் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்து விடுவார்கள் என நினைக்கின்றேன் .மேலதிக தகவல்கள் எதுவும் நாங்கள் கூற முடியாது இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது அத்துடன் தற்போது கண் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.
டி.சந்ரு, செ.திவாகரன்
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago