2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணொருவர் காயம்

R.Maheshwary   / 2022 ஜூலை 06 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுரேஸ்குமார்

வெளிமடை- டயரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் முறிந்து  விழுந்ததில், வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு நிலவிய காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக, குறித்த மரம் தோட்ட குடியிருப்பில் முறிந்து விழுந்துள்ளது.

குறித்த மரம் தொடர்பில், பல மாத காலமாக வெட்டுவதற்காக அனுமதி கேட்ட போதிலும் தோட்ட நிர்வாகம், அனுமதி வழங்கவில்லை  என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதனாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .