2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற, நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருட்டு மின்சாரம் பெற்றுவந்த மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மூன்று பேரை நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சாரசபைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அம்பாறை நகரப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்த இரு வீடுகளை சோதனையிட்டபோது,  திருட்டு மின்சாரம் பெற்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நகரப் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக பொலிஸாரால் கைதுசெய்து நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்து வந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .