Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட்19 இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படாதவர்களுக்கு, எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன், இன்று (02) தெரிவித்தார்.
இதுவரையில் 02 இலட்சம் கொவிட்-19 முதலாவது தடுப்பூசியும், 01 இலட்சத்தி 10 ஆயிரம் இரண்டாவது தடுப்பூசியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதில் முதலாவது தடுப்பூசி 01 இலட்சத்தி 99 ஆயிரத்தி 16 நபர்களுக்கும், இரண்டாவது தடுப்பூசி 97 ஆயிரத்தி 977 நபர்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிடைக்கப்பெறவுள்ள மேலும் ஒரு தொகுதி சினோர்ஃபாம் கொவிட்-19 இரண்டாவது தடுப்பூசி கிரமமான முறையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும், 07 ஆதார வைத்தியாசாலைகளிலும், 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் விசேட மையங்களிலும் இரண்டாவது சினோர்ஃபாம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டு, இரண்டாவது தடுப்பூசி இதுவரை பெறாதவர்கள், தத்தமது சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்குச் சென்று தங்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை பெற்றுமாறு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக தகவல் தேவைப்படுவோர் சம்மந்தப்பட்ட சுகாதார வைத்தியதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் பெற்றுக் கொள்ளலாமெனவும் அறிவித்துள்ளார்.
இதேவேளை, விசேட தேவையுள்ளவர்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று தொடர்ந்து நடமாடும் சேவையூடாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago