2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

37 வருட கால பொறியியல் சேவையிலிருந்து ஓய்வு

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனையை சேர்ந்த MACS. ஐயூப் 37 வருட கால மோட்டார் பொறியியல் சேவையிலிருந்து கடந்த 23ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அதிபர் மர்ஹூம் முஹம்மது அப்துல் குத்தூஸ் மற்றும் முஹம்மது தம்பி சதகதும்மா ஆகியோரின் புதல்வரான இவர் ஆரம்பக்கல்வியை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியிலும், மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும் கற்றார்.

நான்கு வருடங்கள் இலங்கை ஜேர்மன் கல்லூரியில் மோட்டார் பொறியியளையும் கற்று வெளியாகி 1984 இல் இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போவின் பொறியியளாலராக பதவியேற்றார்.

அத்துடன் 1992 தொடக்கம் 1997 வரை அக்கரைப்பற்றுச் சாலை மக்கள் மயமாக்கப்பட்டதன் பின் பொறியியல் பணிப்பாளராக கடமையாற்றியதுடன் கல்முனை, அம்பாறை டிப்போக்களில் பொறியியலாளராகவும், சம்மாந்துறை பிராந்திய பிரதான வேலைத்தளத்தின் பொறியியல் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி சுமார் 37 வருட மக்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

பண்முக ஆளுமையும், மும்மொழித்திறமையும் கொண்ட இவர் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திப்போம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .