2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

50 அடி பள்ளத்தில் பாய்ந்த கெப் வண்டி

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 
ஹட்டன்- டிக்கோயா பிரதான வீதியின் அலுத்கம பகுதியில், கெப்ரக வாகனம் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து, ஓடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் நேற்று இரவு (10)இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பகுதியிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கெப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாகவும், வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸாரின்  ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .