2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இந்தியாவுக்கெதிரான ஐந்தாவது டெஸ்டில் பின்தங்கியுள்ள இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 04 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்மிங்ஹாமில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஐந்தாவது டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.

மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இங்கிலாந்து, அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸின் 25, சாம் பில்லிங்ஸின் 36 ஓட்டங்களோடு ஜொனி பெயார்ஸ்டோ அதிரடியாகப் பெற்ற 106 ஓட்டங்களால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 4, அணித்தலைவர் ஜஸ்பிரிட் பும்ரா 3, மொஅஹம்ட் ஷமி 2, ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா ஆரம்பத்திலேயே ஷுப்மன் கில்லை ஜேம்ஸ் அன்டர்ஸனிடம் இழந்ததோடு, அடுத்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ஹனும விஹாரி, விராட் கோலியையும் ஸ்டூவர்ட் ப்ரோட், ஸ்டோக்ஸிடம் இழந்தது.

எனினும், செட்டேஸ்வர் புஜாராவின் ஆட்டமிழக்காத 50, றிஷப் பண்டின் ஆட்டமிழக்காத 30 ஓட்டங்களோடு மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 416/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 146, இரவீந்திர ஜடேஜா 104, ஜஸ்பிரிட் பும்ரா ஆ.இ 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 5/60, மத்தியூ பொட்ஸ் 2/105, ஜோ றூட் 1/23, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/89, பென் ஸ்டோக்ஸ் 1/47)

இங்கிலாந்து: 284/10 (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 106, சாம் பில்லிங்ஸ் 36, ஜோ றூட் 31, பென் ஸ்டோக்ஸ் 25, மத்தியூ பொட்ஸ் 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/66, ஜஸ்பிரிட் பும்ரா 3/68, மொஹமட் ஷமி 2/78, ஷர்துல் தாக்கூர் 1/48)

இந்தியா: 125/3 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா ஆ.இ 50, றிஷப் பண்ட் ஆ.இ 30, விராட் கோலி 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 1/22, ஜேம்ஸ் அன்டர்சன் 1/26, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/38)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .