2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

டெஸ்ட் குழாமில் இணையும் ஷோ, சூரியகுமார் யாதவ்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய டெஸ்ட் குழாமுடன் பிறித்திவி ஷோவும், சூரியகுமார் யாதவ்வும் இணையவுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தில் உள்ள குழாமுடனேயே இவர்கள் இணையவுள்ளனர்.

இவர்கள் இருவரும் தற்போது இலங்கையில் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காயமடைந்த ஷுப்மன் கில், ஆவேஷ் கான், வொஷிங்டன் சுந்தருக்கான பிரதியீடுகளை அணி முகாமைத்துவம் எதிர்பார்த்த நிலையிலேயே, இவர்கள் இருவரும் தேர்வாளர்கள்ளால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அந்தவகையில், எப்போது இங்கிலாந்தில் உள்ள குழாமுடன் இவர்கள் இருவரும் இணைவார்கள், இலங்கைக்கெதிரான இறுதி இரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பார்களா என்பது தெளிவில்லாமலுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .