2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 22 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பில் நாளை பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை ஏற்கெனவே இழந்துள்ளபோதும், இலங்கை மீளெழுவதற்கு வெற்றி ஒன்று அவசியமாகிறது.

கடந்த போட்டியில் தசுன் ஷானகவின் தலைமைத்துவம் தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், மேலும் ஆக்ரோஷமாக குறிப்பாக வனிடு ஹஸரங்க, துஷ்மந்ந்த சமீரவைப் பயன்படுத்துவது குறித்து கருத்திற் கொண்டாலே இலங்கை வெற்றி குறித்தி சிந்திக்க முடியும்.

லக்‌ஷன் சந்தகான், கசுன் ராஜித போன்றோரின் பந்துவீச்சில் ஓட்டங்கள் பெறப்படும்போது கட்டுக்கோப்பாக பந்துவீசுகின்ற தான், தனஞ்சய டி சில்வா, சாமிக கருணாரத்ன ஆகியோரை தசுன் ஷானக பயன்படுத்த வேண்டும்.

இது தவிர, அவிஷ்க பெர்ணான்டோ, மினோத் பானுக ஆகியோரும் நீண்ட இனிங்ஸ்களை ஆட வேண்டும்.

இந்நிலையில், லஹிரு குமார, பிரவீன் ஜெயவிக்கிரம, அசித பெர்ணான்டோ ஆகியோரில் இருவர் கசுன் ராஜித, லக்‌ஷன் சந்தகனை பிரதியிடக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதேவேளை, தொடர் வெல்லப்பட்டுள்ள நிலையில், தேவ்டுட் படிக்கல், ராகுல் சஹர், கிருஷ்ணப்பா கெளதம், நிதீஷ் ரானா, நவ்தீப் சைனி, சேட்டன் சகரியா உள்ளிட்டோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .