2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

தம்பிலுவிலில் தீ…

Freelancer   / 2023 மார்ச் 23 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள  தம்பிலுவில்  பிரதான வீதியிலுள்ள புடவைக் கடையொன்று இன்று (23) வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடை  வழமையாக பூட்டுவதைப் போல, புதன்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில் சம்பவதினமான இன்று (23) அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதை அருகிலுள்ள பொதுமக்கள் அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து தீயணைக்கும் படை மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் மேல் மாடியை கொண்ட கடை தொகுதி முற்றாக ஏரிந்துள்ளதுடன் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

தீ பரவியமைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை வருகின்றனர்.. (கனகராசா சரவணன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .