2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

‘நபிகளாரின் சமூக உறவு’ நூல் வெளியீடு...

Editorial   / 2022 டிசெம்பர் 11 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாடு சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா வின் – ‘நபிகளாரின் சமூக உறவு’ எனும் நூல் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றது. முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா் தலைமையில் நடைபெற்றது.

தலைமை உரையை மீடியா போரத்தின் ஆலோசகா் என்.எம். அமீன் பிரதம அதிதியாக வெளிநாட்டு அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணி யுமான அலி சப்ரி, சிறப்புப் பேச்சினை தேசியத் தலைவா் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் -முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கௌரவ அதிதிகளான - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் றிசாத் பதியுதீன் நூலின் முதல் பிரதியை முஸ்லிம் ஸலாஹுத்தீன் சிறப்புப் பேச்சினை - காலைக்திா் ஆசிரியா் என். வித்தியாதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஏற்புரை நுாலாசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர். ஆகியோா்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் (அஷ்ரப் ஏ சமத்)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .