Editorial / 2022 நவம்பர் 09 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் தனது 28 ஆவது பிறந்தநாளை இன்று (09) வெகு விமர்சையாக கொண்டாடினார்.
கண்டி, கொட்டுகொடல ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஆசீர்வாத பூசைகள் இடம்பெற்றது. தலதா மாளிகையிலும் விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

அத்துடன், கண்டி, பேராதனை வீதியில் அமைந்துள்ள "தயா"சிறுவர்கள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் சிறார்களுடன் கேக் வெட்டினார்.

இந்த நிகழ்வுகளில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், உப தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
அங்கிருந்து இறம்பொடை வேவண்டன் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு வருகை தந்து பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். பின்னர், கொட்டக்கலை சி.எல்.எப் காரியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள் நிகழ்வில் காங்கிரஸ் குடும்பத்தாருடன் கலந்துகொண்டார். (ஆ.ரமேஸ்)



20 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago