2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

அட்டகாசம்...

Editorial   / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட நிலாவெளி-பெரியகுளம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 அப் பகுதியில் உள்ள பாடசாலை வளாகத்தின் சுற்று மதில்களும் பல தடவை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இக் காட்டு யானையின் தொடர் அட்டகாசத்தால் நிம்மதியாக தூங்க முடியாத நிலையும் தங்களது பிள்ளைகளை அச்சத்துடனேயே பாடசாலைக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கிராமத்துக்குள் புகும் காட்டு யானையானது மேட்டு நிலப் பயிர்களையும் துவம்சம் செய்து விட்டு செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இக் காட்டு யானை தொடர் தொல்லைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். (ஹஸ்பர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .