Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரு. ஹென்றி பே மற்றும் சிங்கப்பூர் நலன் விரும்பிகளிடமிருந்து 250 ஒட்சிசன் செறிவூட்டிகள் உள்ளடங்கலான கொவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை சிங்கப்பூரின் மஹா கருண பௌத்த சங்கத்தின் மத ஆலோசகர் கலாநிதி. கே. குணரதன தேரின் அனுசரணையுடன், சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டது.
திருமதி. ராகுல் ரூஹீ தகாஹாஷியினால் நன்கொடையளிக்கப்பட்ட 20 ஒட்சிசன் செறிவூட்டிகளும் மேலும் நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளப்பட்டன.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான சிங்கப்பூரின் கௌரவ தூதுவர் ஜயந்த தர்மதாச, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் நன்கொடைகளைக் கையளித்தார்.
3 hours ago
8 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
29 Jan 2026