2022 ஜூலை 04, திங்கட்கிழமை

வவுனியா மாணவர்கள் பேரணி

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

அரசாங்கத்துக்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (05) கண்டன பேரணி மேற்கொண்டனர்.

வவுனியா, காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக கடைவீதியை அடைந்து கடைவீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரத்தை வந்தடைந்து, அங்கிருந்து பழைய பஸ் நிலையத்தின சென்றடைந்திருந்தது.

இதன்போது ஜனாதிபதி கோட்டதபய மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர்.

பேரணி காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்துக்கு ஸ்தம்பிக்கப்பட்ட போதிலும், போக்குவரத்து பொலிஸார் மாற்றுவழியினூடாக வாகனங்களை செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இந்நிலையில், மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக மாணவர்கள் நீண்ட நேரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டமையாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, இப் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் ஓட்டோ சாரதிகள் குடிநீர்ப் போத்தல்களை வழங்கி, தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .