2025 ஜூலை 19, சனிக்கிழமை

சேர். பொன்.இராமநாதனின் குருபூசை…

Editorial   / 2022 நவம்பர் 29 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாவதற்கு  அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 92ஆவது குருபூசை  செவ்வாய்க்கிழமை (29) காலை இடம்பெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், சபா மண்டபத்தினுள் உள்ள உருவப் படத்துக்கும் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மலர்மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X