Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 நவம்பர் 13 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்பின்னர், உயிரிழத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளை, இலங்கை விமான படையின் "சுப்பர் சொனிக்" விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் , 25க்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
பழமை வாய்ந்த தேவாலயமும் பகுதிகளவில் கடும் சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது. குறித்த தேவாலயமானது 1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago