2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

துப்பாக்கியுடன் புத்தளத்தில் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹி​ரான் பிரியங்கர

புத்தளம் மன்னார் பழைய வீதியின், 4ஆம் கட்டைப் பிரதேசத்தில், துப்பாக்கி மற்றும் ரவைகள், என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் இன்று (24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தக்கூடிய,  113 ரவைகளும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட 49 வயதுடைய சந்தேக நபரை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, புத்தளம் பொலிஸாரிடம்  ஒப்படைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக, புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .