2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பூக்குளம் கிராமத்துக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம்

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல வீடுகளுக்கும் மின்சார வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ், மின்சார இணைப்பு வழங்க முடியாத பூக்குளம் கிராமத்தில் வாழும் மக்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சார வசதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று (26) நடைபெற்றது.

வில்பத்து எல்லைக்கு அருகிலுள்ள இந்தப் பிரதேசத்தில், சுமார் 70இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சார வசதியின்றி, பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் நீண்ட காலமாக மின்சாரமின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த பிரதேச மக்கள் எதிர்நோக்கி வரும் மின்சாரப் பிரச்சினைகள் பற்றியும், அவர்களுக்கு சூரிய சக்தி மின் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், மனித உரிமைகள் ஆணைக்கு, கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவிடம் வேண்டுகோளுக்கிணங்க, நேற்றைய தினம் இந்த சூரியசக்தி மின் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த மின்சார உபகரணங்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .