2023 ஜூன் 07, புதன்கிழமை

மருமகளை தேடியவர் சம்பந்திக்கு வலை

Editorial   / 2022 நவம்பர் 09 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருமகளை தேடிய ஒருவர், அவரது தாய்க்கு வலை வீசிய சம்பவம் தனது 40 வருட திருமண தரகர் வாழ்க்கையில் கண்டதில்லை என தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தனக்கு கிடைத்த பணத்துடன் அந்த சம்பந்தத்தை பேசுவதை அத்தோடு நிறுத்தியும் கொண்டுள்ளார்.  

கேகாலை நகரில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் மூவரும் ஆண்கள்.

அவர், இலங்கை இராணுவத்தில் கடமையாற்றியவர் என்று அறியமுடிகின்றது. வீடு, வாசலுடன், தனக்கு கிடைக்கும் ஓய்வூதிய பணத்தை வைத்து ஜீவியத்தை நடத்திவருகின்றார்.

தனது இரண்டு மகன்மார்களும் திருமணம் முடித்துவிட்டனர். அதிலொருவர் அந்த கிராமத்திலேயே வசிக்கின்றார். மற்றையவர் பெண் வீட்டாருடன் சென்றுவிட்டார். மூன்றாவது மகன் வடக்கில் படையில் கடமையாற்றுகின்றார்.

அவரு​டைய மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டமையால், முழு வேலைகளையும் அவரே இழுத்துப்போட்டு செய்துகொள்வார். 26 வயதான மகனுக்கு ஏதாவது காதல் தொடர்புகள் இருக்கின்றதா? எனக் தேடிப்பார்த்துள்ளார்.

இல்லை, அதனையடுத்து திருமண தரகருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இரண்டொரு வாரங்கள் கழித்து, பெண்ணை பார்ப்பதற்காக இரண்டொரு கிராமங்களுக்கு அப்பால் இருக்கும் கிராமத்துக்கு தந்தை, மகன், தரகர் மூவரும் சென்றுள்ளார்.

பெண்ணின் குடும்பத்தில் மூவர் மட்டுமே உள்ளனர். அதில், ஆண் பிள்ளை திருமணம் முடித்து சென்றுவிட்டார். பெண் பிள்ளையும் அவருடைய அம்மா  மட்டுமே இருக்கின்றனர்.

விபரங்களை அறிந்துகொண்ட மணமகனின் தந்தை, தேனீரை குடித்துவிட்டு, அந்தப் பெண் பிள்ளையின் தாயின் அலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டு மேலதிக தகவல்களை கூறுவதாக தெரிவித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

வீட்டில் தனிமையில் இருக்கும் போதெல்லாம். அந்த பெண்ணின் அம்மாவுடன் தொடர்பை ஏற்படுத்தி பேசியுள்ளார்.

இரண்டொரு வாரங்கள் கழித்து திருமண தரகர், மாப்பிள்ளையின் அப்பாவை சந்திக்கச் சென்றுள்ளார்.

திருமணத்துக்கு ஒகே ஆனால், எனக்கும், அந்தப் பெண்ணின் தாயாருக்கும் இடையில் ஓர் உறவு மலர்ந்துவிட்டது. ஆணின் துணை இல்லாதது அந்தப் பெண்ணுக்குத் தெரியும், பெண்ணின் துணை இல்லாதது எனக்கு புரியும்.

ஆகையால், முதலில் இதை பேசுவோம் என திருமண தரகரிடம் தெரிவித்துள்ளார்.

உடனே வீட்டுக்குள் சென்று, 5,000 ரூபாய் தாள்கள் சிலவற்றையும் தரகரின் கைகளில் திணித்துள்ளார்.

எதற்கு தலையாட்டுவது எனத் தெரியாமல், தலையை அசைத்துக்கொண்டே வீட்டை விட்டு கிளம்பிய தரகர், பணத்தை எண்ணிப்பார்த்துள்ளார். அதில், 5 ஆயிரம் ரூபாய் தாள்கள் 5 இருந்துள்ளன.

போதுமடா சாமி, தனது 40 வருட தரகர் வாழ்க்கையில் இவ்வாறனதொரு சம்பவம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது எனக் கூறிக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பியவர் அந்த பக்கமே தலைவைக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .