2022 ஜூலை 04, திங்கட்கிழமை

முக்கோண காதலால்“பரண தல பூட்டுவா”வுக்கு படுகாயம்

Editorial   / 2022 ஜனவரி 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு யானைகளுக்கு  இடையில் ஏற்பட்ட சண்டையில்,

முக்கோண காதல் காரணமாக கலாவெவ தேசிய பூங்காவில் இரண்டு யானைகளுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் “பரண தல பூட்டுவா”, படுகாயமடைந்தது.

கெக்கிராவ மிரிஸ்வத்த காட்டுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் இருந்த அந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டதாக கனேவல்பொல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

 அநுராதபுரத்தைச் சேர்ந்த பந்துலகம வனவிலங்கு வைத்தியர் சந்தன ஜயசிங்க உள்ளிட்ட கால்நடை வைத்தியர்கள் குழு கனேவல்பொல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளின் உதவியுடன் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் இந்த சண்டை ஏற்பட்டதாகவும், அடையாளம் தெரியாத யானை, “பரண தல பூட்டுவா” தந்தங்களினால் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால், உடலின் பல பாகங்களில், தந்​தங்களால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   

காயமடைந்த , “பரண தல பூட்டுவா” யானையின் ஜோடி தந்தங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி, எக்ஸ் வடிவில் இருப்பதனால், யானைக்கு சண்டையிடுவது கடினமாக இருந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த , “பரண தல பூட்டுவா” எனும் யானை, காட்டுக்குள் சென்றுவிட்டமையால், அந்த யானைக்கு மயக்க மருந்து ஊசிப் போட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .