2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

S. Shivany   / 2020 நவம்பர் 09 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் -சிலாபம் வீதியில், பத்துகுழுஓயா சந்திக்கருகில் நீர் நிரம்பிய குழிக்குள் இருந்து, ஆண் ஒருவர், இன்று (09) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்டவர், கீரியன்கல்லி பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய நபர் என, அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேற்படி நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில்  உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

 


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X