2023 ஜூன் 01, வியாழக்கிழமை

‘ஐஸ்’ இல் மிதக்கும் மாணவிகள்

Editorial   / 2022 நவம்பர் 13 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ், உள்ளிட்ட போதைப் பொருட்களின் பாவனைகள் பாடசாலை மாணவ, மாணவிகள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக தெரிவந்துள்து.

வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பெருமளவிலான மாணவிகள் தற்போது ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பல பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் அதிகளவான மாணவிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுடன், 8 ஆம் தரத்தில் இருந்து உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடமேற்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பிரதான பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவிகள் இவ்வாறு போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் தமது காதலர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் ஊடாக போதைப்பொருளை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில காலங்களுக்கு முன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தூள் என்ற போதைப்பொருள் தற்போது மாணவிகள் மத்தியிலும் பரவி வருவதும், பள்ளி நேரங்களில் கழிவறைக்கு செல்லும் போது இதை அடிக்கடி பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

மேலும், வார இறுதி நாட்களில் முக்கிய நகரங்களில் நடத்தப்படும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறேன் என்ற போர்வையில் மாணவிகள் தங்கள் ஆண் நண்பர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இந்த போதைப்பொருள்களை பயன்படுத்த ஆசைப்படுவதும் தெரியவந்துள்ளது.

இது மிகவும் பாரதூரமான பிரச்சினை எனவும், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத குருநாகல் பாடசாலையின் அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில், நாட்டின் ஒட்டு மொத்த பாடசாலை முறையும், நாட்டின் எதிர்காலத்தை கையகப்படுத்தும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனையினால் அழிவதை தடுக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருத்துரைத்த வடமேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ராஜிதா ரத்நாயக்க, இது மிகவும் பாரதூரமான நிலை என்பதால் இது தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

சிலாபம் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின்  ​அதிபர்கள் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .