2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

18 பிக்கு மாணவர்களுக்கு தொற்று

Editorial   / 2021 நவம்பர் 01 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

ஆனமடுவ - கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில்  18 பிக்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்  தெரிவித்துள்ளது.

வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில்  தங்கியிருந்து கல்வி பயிலும்  பிக்குகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சுமார் 65  பிக்கு மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில், 10 சிறுவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான 18  பிக்கு மாணவர்களுக்கும் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .