2021 ஜூலை 31, சனிக்கிழமை

நன்னீர் மீன்பிடி சங்கங்களை தெரிவு செய்யும் போட்டி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
 
வடமேல் மாகாண  கடற்தொழில் அமைச்சு புத்தளம் குருநாகல் மாவட்டத்திலுள்ள சிறந்த நன்னீர் மீன்பிடி சங்கங்களை தெரிவு செய்து பரிசளிக்கும் திட்டமொன்றினை முன்வைத்துள்ளது. வடமேல் மாகாண கடற் தொழில்  அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா நன்னீர் மீன்பிடி சங்கங்களின் செயற்பாடுகளை மேம்படுத்த இந்த திட்டத்தினை முன்வைத்துள்ளார்.  தெரிவு செய்யப்படும் மீன்பிடி சங்கங்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
 
முதலாவது பரிசு ரூபா 25,000,  இரண்டாம் பரிசு ரூபா 15,000, மூன்றாம் பரிசு ரூபா 10,000  இந்த பரிசு திட்டத்தில்  இணைந்த கொள்ள விரும்பும் நன்னீர் மீன்பிடி சங்கங்கள் பம்பளையிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் நேரடியாகவோ தபால் மூலமோ விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .