2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

புத்தளம் நகரசபை புதிய அங்கத்தவர்களின் முதல் அமர்வு

Kogilavani   / 2011 மார்ச் 30 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம். மும்தாஜ்)

புத்தளம் நகர சபையின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கே. ஏ. பாயிஸ் தலைமையிலான முதலாவது சபை அமர்வு வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் புத்தளம் நகர சபைக்கு அதி கூடிய விருப்பு வாக்குகளாக 8500 விருப்பு வாக்குகளைப் பெற்ற கே. ஏ. பாயிஸ் நகர பிதாவாகவும்,  இரண்டாவது அதி கூடிய விருப்பு வாக்குகளாக 4996 விருப்பு வாக்குகளைப் பெற்ற முன்னாள் பிரதி நகர பிதா ஆர். ஏ. எஸ். புஸ்பகுமார மீண்டும் பிரதி நகர பிதாவாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .