2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

வங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி

J.A. George   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் ஒரு விரைவான மாற்றத்தை அனுபவித்து வருகிறது. தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக கடந்தகால நடத்தைகள் மாறிவருவதால், புதிய சூழலில் சமூகங்கள் முன்னேறும்போது தொழில்நுட்பம் புதிய நடத்தைகளை எளிதாக்குவதில் இறங்கியுள்ளது. 

பணமில்லா பரிவர்த்தனை களின்; அதிகரிப்பு, தனித்துவமான வங்கி அனுபவங்களை வழங்க ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு ஆகியவற்றுடன் நிதி சேவைகள் அரங்கிலும் கூட இது உண்மையாகவே உள்ளது. முன்னேற்றத்திற்காக வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

NDB ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியிடல் போன்ற முன்னேற்றகரமான டிஜிட்டல் தீர்வுகளுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு நகர்வதில் NDB வங்கி எப்போதும் முன்னணியில் உள்ளது.

அதன் NEOS 2025 யுக்தியினால் தூண்டப்பட்ட NDB வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கியிடலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மறுவரையறை செய்ய மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் புதுமையையும் இணைக்கிறது. மற்றவர்களுடன் குறைந்தபட்ச தொடர்புகள் ஊக்குவிக்கப்படும் நேரத்தில், NDB வங்கி NEOS செயலியின் மூலமும், QR கட்டண முறையின் மூலமும் NEOS கட்டணம் செலுத்தும் முறையினை அறிமுகப்படுத்தியது. 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வியாபாரிகளுக்கு பணம் செலுத்தலாம், ஏனைய கட்டணங்களை செலுத்தலாம், அதே நேரத்தில் வங்கி பரிமாற்றங்களை ஒரே தளத்தில் அணுகலாம். NDB வங்கியின் இந்த NEOS முறையானது இலங்கையில் முதலாவது வங்கியிடல் மற்றும் வணிக பரிவர்த்தனைகளை ஒரே ஒரு செயலியில் செயல்படுத்தியது. 

மேலதிக வசதிகள் சேர்க்கப்பட்டு, மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கலும் தங்களின் மற்ற வங்கிக் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி NDB NEOS இல் பதிவு செய்யும் வசதியும்; வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு  JustPay எனும் முறையின் மூலம் எளிதாக்கப்படுகிறது மற்றும் மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு NEOS செயலி மூலம் ஞசு குறியீடு வசதியைப் பயன்படுத்தி வியாபாரிகளின் கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களைச் செலுத்துவதற்கு உதவுகிறது. 

வங்கி சமீபத்திய வீடியோ KYC (vKYC) அடிப்படையிலான கணக்கு திறப்பு செயல்முறையைத் தொடங்கியது.  இது அதன் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியின் முதல் பல சாதனைகளை ஒன்றாகக் கொண்டுவருகிறது. vKYC சரிபார்ப்பு முறையானது செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்கள் ஒரு வாங்கிக் கிளைக்கு செல்லாமல், வீட்டில் வசதியாகவும் பாதுகாப்;பாகவும் இருந்தபடியே NDB கணக்குகளைத் திறக்க உதவுகிறது. மேலதிகமாக, வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட கடன் அறிக்கைகள் iReportமற்றும் தனிப்பட்ட கடன் மதிப்பெண் அறிக்கைகள் ஆகியவற்றை இலங்கையில் எந்த இடத்தில் இருந்தும் Nனுடீ NDB NEOS மூலம் பதிவு செய்து கொள்ளவதற்காகவும் கோரிக்கை விடுப்பதற்காகவும்; ஒரு தொந்தரவு இல்லாத வசதியான சேவையை உருவாக்குவதற்காக வங்கித்துறையில் கடன் தகவல் பணியகத்துடன் (ஊசுஐடீ) கைகோர்த்த முதல் வங்கியாகவும் இது மாறியது. 

NDB இயக்குனர்ஃகுழுத் தலைமை நிர்வாக அதிகாரி திமந்த செனவிரத்ன அவர்கள் இதுவரையியிலான சாதனைகள் குறித்து பேசுகையில், 'எங்கள் மூலோபாய டிஜிட்டல் பயணத்தின் ஒரு பகுதியாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வணிக மற்றும் தனிப்பட்ட நிதிகளில் மிகவும் வசதியான மற்றும் அதிநவீன தீர்வுகளை வழங்குவதற்காகவும் வங்கியின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யவதற்காகவும் NDB இன் சேவை வரன்முறை மற்றும் தொழில்நுட்ப அறிவினை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்' எனக் குறிப்பிட்டார். 

NDB வங்கி இந்த புதிய டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தின் முன்னோடியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவதற்காக டிஜிட்டல் எதிர்காலம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முகத்தை மீண்டும் கற்பனை செய்தல் என்பவற்றை தழுவிய  'எதிர்காலத்தில் எங்களுடன் வங்கியிடல்' எனும் தனது புதிய வர்த்தக குறியினை (Brand) நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. 

இந்த போட்டிமிகு சூழலிலும், வங்கியின் வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் தொடர்ந்து புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் NDB வங்கி டிஜிட்டல் வங்கியிடலில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. அதன்படி, அமெரிக்காவின் புகழ்பெற்ற குளோபல் ஃபைனான்ஸ் இதழால் '2021 இற்கான இலங்கையின் சிறந்த வங்கி' எனவும் இங்கிலாந்தின் தி பேங்கர் சஞ்சிகையினால் 'வருடத்தின் சிறந்த வங்கி' என முடிசூட்டப்பட்டதற்கு மேலதிகமாக இலங்கைக்கான ஆசியாமனி சிறந்த வங்கிகளின் விருது வழங்கும் நிகழ்வில் 'சிறந்த டிஜிட்டல் வங்கி 2021' எனும் விருதும் NDB வங்கிக்கு வழங்கப்பட்டது. 

NDB வங்கியானது இலங்கையில் பட்டியலிடப்பட்டுள்ள 4 வது பெரிய வங்கியாகும், மேலும் இது NDB குழுவின் தலைமை நிறுவனமாகும். இலங்கையில் உள்ள ஒரே நிதிச் சேவை நிறுவனமான NDB குழுமம், அதன் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் அனைத்து குழு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல்களுக்கு தடையற்ற அணுகலை வழங்குவதற்காக இலங்கையின் மூலதனச் சந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X