Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வர்த்தக அமைச்சின் அனுசரணையில் பாகிஸ்தானின் வர்த்தக மேம்பாட்டு ஆணையம், கொவிட்-19 நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானின் முதல் இணையத்தள வர்த்தக கண்காட்சியை இன்று முதல் 05 ஆம் திகதி வரை நடத்தவுள்ளது.
இவ்விணையத்தள கண்காட்சியானது 24 மணி நேரமும் செயற்படும். இதனால் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர், பார்வையாளர்கள் தங்கள் நாட்டு நேர மாற்றங்களுக்கு ஏற்ப தமது அலுவகங்கள், வீடுகளிலிருந்தவாறே கலந்து கொள்ள முடியும்.
பாகிஸ்தானின் தரமான ஆடை உற்பத்தியைக் காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் வீட்டு ஆடைகள், உயர்நிலை நவநாகரீக ஆடைகள், துணிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை இக்கண்காட்சியில் அடங்கும்.
இக்கண்காட்சியானது, பாகிஸ்தானிய உற்பத்தியாளர்களுடன் சர்வதேச நுகர்வோரை வீடியோ, ஓடியோ தொழில்நுட்பம் மூலம் ஒன்றிணைக்கும். டிஜிட்டல் வணிகப் பரிமாற்றம், கண்காட்சி குழுவினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் திறன், வீடியோ, புகைப்பட தொழில்நுட்பம் மூலம் அனைத்துவகையான உற்பத்திப்பொருட்களையும் விரிவாகக் காண்பித்தல் போன்ற மேலும் பல அம்சங்கள் இக்கண்காட்சியில் அடங்கும்.
மேலும், உலகளாவிய ஆடை உற்பத்தி சந்தையில் முக்கிய போக்குகளை தெளிவுபடுத்தும் ஆடை உற்பத்தித்துறை, நவநாகரிக அணி வகுப்புகள் பற்றிய தகவல் கருத்தரங்குகளும் இதில் நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .