2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

செலான் வங்கி - Mintpay உடன் இணைவு

S.Sekar   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களுக்கு தற்போது பொருட்களை அல்லது சேவைகளை கொள்வனவு செய்து பின்னர் கட்டணம் செலுத்தும் புதிய கட்டமைப்பொன்றை செலான் வங்கி, Mintpay உடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. Mintpay இன் AI கட்டமைப்பில் இயங்கும் விற்பனை நிலையங்களிலிருந்து கொள்வனவு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களினூடாக, சந்தையில் தற்போது தவணை முறையிலான கொடுப்பனவு திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், வாடிக்கையாளர் விற்பனை நிலையத்துக்கு சென்று தமது கொடுக்கல் வாங்கலை தவணை முறையில் செலுத்துவதற்கு மாற்றி கோர வேண்டியுள்ளது அல்லது நிதிச் சேவைகளை வழங்கும் சேவை வழங்குநருடன் தொடர்பு கொண்டு கொடுக்கல் வாங்கலை தவணை முறையில் மீளச் செலுத்தக்கூடியதாக மற்றியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால்  Mintpay  மூலம் வங்கியிலும் விற்பனை நிலையத்திலும் இந்த செயன்முறையை சுயமாக நிர்வகிகக்கூடியதாக அமைந்துள்ளது.

இலங்கையில் ஒன்லைன் சொப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக இந்த பங்காண்மை அமைந்துள்ளது. Algoredge (PVT) LTD இனால் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தினூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பிரத்தியேகமான சொப்பிங் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு Mintpay கொடுப்பனவு கட்டமைப்பைப் பயன்படுத்தி, தமது சொப்பிங் செலவை 3 வட்டியில்லாத தவணை முறை கொடுப்பனவு திட்டமாக மாற்றிக் கொண்டு, இரண்டு மாத காலப்பகுதியினுள் செலுத்த முடியும். இந்த தீர்வினூடாக வாடிக்கையாளர்களுக்கு Mintpay இல் தம்மைப் பதிவு செய்துள்ள எந்தவொரு ஒன்லைன் விற்பனைப் பகுதியையும் பார்வையிட்டு, அவர்களின் தகவல்களை பதிவு செய்வதனூடாக, சுயமாக அவர்களின் கொடுப்பனவுகள் தவணை முறைக் கொடுப்பனவுத் திட்டமாக மாற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Mintpay க்கு பதிவு செய்து கொள்ளும் முறை இலகுவானது, சிக்கல்கள் அற்றது. வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் முற்பண சேவையாக கருத முடியும் என்பதுடன், விற்பனையாளருக்கு தமது பொருள் விற்பனை செய்யப்படும் போதே அதற்கான முழுப் பெறுமதியையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இது போன்ற உள்ளம்சங்களினூடாக கொடுப்பனவு அறவீடுகள் தொடர்பில் காணப்படும் பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய தேவையையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

2020 செப்டெம்பர் மாதத்தில் ஆரம்ப பரீட்சார்த்த அறிமுகம் மேற்கொள்ளப்பட்டதுடன், Mintpay அணியினால் தமது சேவையின் உறுதித் தன்மை உறுதி செய்யப்பட்டு, மேலும் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .