2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

இரசாயன உரப் பாவனைத் தடை உற்பத்தியை பாதிக்கும்

S.Sekar   / 2021 ஜூன் 18 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

  • 30 விஞ்ஞானிகள் ஜனாதிபதிக்குக் கடிதம்

இரசாயன உரப் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், அதனால் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் என 30 விஞ்ஞானிகளும் நிபுணர்களும் இணைந்து ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறான அசேதன உரத்தை பயன்படுத்தியிருந்தமை காரணமாக நாட்டில் சாதிக்காய், கராம்பு, வனிலா மற்றும் ஏலக்காய் போன்ற பயிர்களின் விளைச்சலில் அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. இவ்வாறான பயிர்கள் பெரும்பாலும் விவசாயவனார்ந்தரக் கட்டமைப்புகளில் மிகவும் குறைந்தளவு அசேதன உரங்களைப் பயன்படுத்தி பயிரிடப்படுகின்றன.

இரசாயன உரத் தடை தொடர்பான தீர்மானத்தினால் இவ்வாறான பயிர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்பதுடன், மிளகு, கோப்பி மற்றும் கொக்கோ போன்ற பயிர்களுக்கு பச்சை உரத்தை (உதாரணம் கிளிரிசிடியா சேர்ப்பதனூடாக அவற்றில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதுபோன்று, கௌப்பி, பயறு, உழுந்து மற்றும் சோயா அவரை போன்ற அவரை இனங்களை இவ்வாறான முறையில் பேணிக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும், மிகவும் முக்கியமான பயிர்களின் விளைச்சல்கள் 25% முதல் 100% வரை பாதிக்கக்கூடும், இவை விவசாயத்தில் அதிகளவு முக்கியத்துவத்தைப் பெறுவதுடன், உரத்துக்கு பதிலளிக்கும் திறனிலும் பாதிப்பை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

இது போன்ற சூழ்நிலைகளை உலகநாடுகளில் அவதானிக்க முடிந்தது. சோளம், இறுங்கு மற்றும் அரிசி வகைகள் மற்றும் தேங்காய் போன்றவற்றிலிருந்து பெறப்படும் ஒதுக்கங்கள் விலங்குத் தீனிகளாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவ்வாறான பயிர்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக, விலங்குத் தீனிகளின் தரத்திலும், செலவிலும் பாதிப்பை ஏற்படுத்தி, கால்நடை மற்றும் கோழிப் பண்ணைத் தொழிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அரசி மற்றும் தேயிலை போன்றவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படுகின்றது. பிரதான ஆகாரமும், நாட்டுக்கு முக்கியமான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பயிராகவும் இவை திகழ்கின்றன என அந்த விஞ்ஞானிகளும், நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேயிலைச் செய்கை என்பது கடுமையான சர்வதேச போட்டிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கிளிபோசேட் தடை காரணமாக உலக சந்தையில் ஒரு பங்கை இலங்கைத் தேயிலை இழந்திருந்தது. இவ்வாறு இழந்தை சந்தையை இலங்கையால் மீளப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. (சுமார் 15 – 20 பில்லியன் ரூபாய்). எனவே, தேயிலைச் செய்கையில் ஏற்படும் தாக்கம் என்பது, நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், அதனை மீளமைத்துக் கொள்வது மிகவும் கடினமாகும்.” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X