Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2023 மார்ச் 20 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பவர் என அறியப்படும், ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், தனது நுகர்வோர் பிரிவை வலிமைப்படுத்தி, தனது முகவர்களை இரட்டிப்பாக்குவதற்கும், தனது இலாகாவை விரிவாக்கம் செய்வதற்கும், நாட்டின் சகல பாகங்களையும் சென்றடையக்கூடிய வகையில் விரிவாக்கத்தை மேற்கொள்ளவும் முன்வந்துள்ளது.
முழு பெறுமதி சங்கிலியையும் விரிவாக்கம் செய்யும் பணிகளை பவர் முன்னெடுப்பதுடன், இதற்காக நிறுவனத்தின் வசம் காணப்படும் மதிநுட்பமான உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துகின்றது. தனது முழு விநியோக செயன்முறையிலும் தரவுகள் அடிப்படையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க பவர் முன்வந்துள்ளதுடன், விற்பனை நிலையங்கள் மத்தியில் தனது பிரசன்னத்தை மேம்படுத்தவும், அதற்காக மேம்படுத்தப்பட்ட எதிர்வுகூரல் மற்றும் நிலைத்திட்டமிடலை பின்பற்றவும் முன்வந்துள்ளது.
இந்தப் பிரிவின் மாற்றங்களை வழிநடத்தும் பொறுப்பை, பவர் நிறுவனத்தின் நுகர்வோர் வியாபாரங்களின் சிரேஷ்ட பொது முகாமையாளர் டேனியல் ஹெஸ் வகிக்கின்றார். கடந்த ஆறு மாதங்களாக இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவரான ஹெஸ், புதிய வியாபாரங்களை நிலைபேறான வகையில் கட்டியெழுப்பல் மற்றும் வியாபாரங்களை புதிய, நம்பிக்கையூட்டும் வழிகளில் கொண்டு செல்வதில் விசேடத்துவம் பெற்றுள்ளார்.
குறுகிய காலப்பகுதியில் அதன் விநியோக வலையமைப்பை 50,000 க்கு அதிகமானதாக இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளதுடன், நுகர்வோர் பொருட்கள் மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்ட இலங்கை மற்றும் சர்வதேச நிறுவனங்களை உள்வாங்கவும், அதன் முகவர்களை இணைத்துக் கொள்வதை இரட்டிப்பாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வனப்பை உலகுக்கு கொண்டு செல்லும் வகையில், ஐரோப்பிய பிராந்தியத்தின் முக்கியமான சந்தைகளில் பவர் இயங்குவதற்கு இந்தப் பிரிவினால் மிகவும் முக்கியமான பங்களிப்புகள் வழங்கப்படுவதுடன், ஏற்றுமதி தொடர்பான பாரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நுகர்வோர் வியாபாரங்கள் மற்றும் டேட்டாவை இணைத்து அதனூடாக, ஈடுபாட்டையும் விற்பனைகளையும் மேம்படுத்துவதில் பங்களிப்புச் செய்வதில் ஹெஸ் உறுதியான தடத்தைக் கொண்டுள்ளார். சூரிச் HWZ கல்வியகத்தின் சந்தைப்படுத்தல் இளமானிப் பட்டத்தை இவர் கொண்டிருப்பதுடன், ஜேர்மனியின், பேர்ளின் ஸ்டெய்ன்பிஸ் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடக முகாமைத்துவம் போன்றவற்றுக்கான MBA பட்டத்தையும் கொண்டுள்ளார்.
பவர் நிறுவனத்துடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, ஒரு தசாப்த காலமாக, மைக்குரோசொஃப்ட் நிறுவனத்தின் Xbox வியாபாரத்தை அறிமுகம் செய்தல் மற்றும் தலைமைத்துவமளித்தல் பணியில் ஹெஸ் ஈடுபட்டிருந்தார். புதிய தயாரிப்புகள் மற்றும் வியாபாரங்களை சர்வதேச சந்தைகளில் (அமெரிக்கா, ஜேர்மனிய மொழி பேசும் ஐரோப்பா மற்றும் தென் கிழக்காசியா) அறிமுகம் செய்யும் உறுதியான அனுபவத்தை இவர் கொண்டுள்ளார்.
அண்மைக் காலத்தில், அவர் D2C வியாபாரங்களையும், அணிகளையும் தரவுகளின் அடிப்படையிலான எதிர்காலத்துக்கு கொண்டு செல்ல அவசியமான தலைமைத்துவத்தை வழங்கியிருந்ததுடன், பாரம்பரிய வியாபார மாதிரிகளை மாற்றியமைக்கும் பணிகளையும் மேற்கொண்டிருந்தார்.
3 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
51 minute ago
2 hours ago