2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

இலகு ரயில் திட்டம் இரத்துக்கு ஜப்பான் நஷ்டஈடு கோரல்

S.Sekar   / 2021 ஜூன் 21 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஜப்பானிய கடனுதவியில் நிறுவப்படவிருந்த இலகு ரயில் திட்டம் கடந்த ஆண்டில் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்காக 5896 மில்லியன் ரூபாயை ஜப்பானிய நிறுவனம் நஷ்டஈடாக கோரியுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டு காலமாக இந்த இலகு ரயில் திட்டத்தை நிறுவுவது தொடர்பான ஆரம்பக் கட்டப் பணிகளை இந்த ஜப்பானிய நிறுவனம் இலங்கையில் முன்னெடுத்திருந்த போதிலும், கடந்த ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய சர்வதேச கூட்டுத்தாபனம் இலங்கையில் துறைமுகங்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு முன்னதாக ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் இரத்துச் செய்யப்பட்ட போது, குறித்த நிறுவனத்தினால் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்ததுடன், நிதியும் வழங்கப்பட்டிருந்தன.

குறித்த திட்டத்துடன் தொடர்புடைய கடன் உடன்படிக்கை கொள்கைத் தீர்மானத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆலோசனை ஒப்பந்தமும் இடைநிறுத்தப்பட்டதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.

அரசாங்க கணக்குகளை மீளாய்வு செய்ததன் பின்னர் கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர், சம்பந்தப்பட்ட ஆலோசனை நிறுவனம் 5896 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இந்தத் திட்டத்துக்காக 130 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உடன்படிக்கையில் ஆலோசனை நிறுவனத்துடன் இலங்கை கைச்சாத்திட்டிருந்தது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .