2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

Dragons of Asia 2022 விருதுகளில் செலான் வங்கிக்கு வெள்ளி விருது

S.Sekar   / 2023 ஜனவரி 02 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, Dragons of Asia வினைத்திறனான சந்தைப்படுத்தல் விருதுகள் 2022நிகழ்வில் வெள்ளி விருதை சுவீகரித்திருந்தது. முகவர் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களால் ஆசிய பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த பெறுபேறுகள் அடிப்படையிலான சிறந்த சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களை தெரிவு செய்து கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட #ResponsibleMe எனும் திட்டம் வெற்றிகரமாக அமைந்திருந்ததுடன், கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுய விழிப்புணர்வு மற்றும் தனிநபர் பொறுப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. அதனூடாக, சிறந்த திட்டம், தன்னார்வ சந்தைப்படுத்தல் அல்லது பொதுத் துறைக்கான திட்டம் என்பதன் கீழ் வெள்ளி விருதை சுவீகரிக்க செலான் வங்கிக்கு முடிந்தது. இந்தப் பிரிவில் விருதை வென்ற ஒரே வங்கியாக செலான் வங்கி காணப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலைத் தாக்கம் மோசமாக காணப்பட்ட வேளையில், அன்புடன் அரவணைக்கும் வங்கி, பொது மக்கள் மத்தியில் தாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அதன் பங்களிப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியமை தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகளை பின்பற்றுவதில் ஊக்கமின்மை அவதானிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றுப் பரவலால் சோர்வடைந்த நிலையை மக்கள் எதிர்கொண்டிருந்த நிலையில், இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

முகக் கவசம் அணியுங்கள் அல்லது சமூக இடைவெளியைப் பேணுங்கள் என்பன சாதாரண தகவல்களாக மாத்திரமே அமைந்திருக்கும் என்பதை வங்கி உணர்ந்திருந்தது. எனவே, இந்தத் தகவலை மக்கள் மத்தியில் ஆழமாக சென்றடையக்கூடிய வழிமுறையை பற்றி செலான் வங்கி சிந்தித்திருந்தது. இதனூடாக தூய்மையான கரங்களுடன், சற்று உருக்கமாக எனும் தொனிப்பொருளுடனான திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் செலான் வங்கியின் அங்கத்தவர்கள் #ResponsibleMe எனும் தகவலை பொது மக்கள் மத்தியில் பரவலடையச் செய்வதற்கான பொறுப்பை தாம் ஏற்று, தமது சொந்த சமூக ஊடக வலைத்தளப் பகுதிகளில் சொந்தக் கருத்துக்களை எழுப்ப ஆரம்பித்தனர். சமூகத்தில் பிரதான கருத்தை சென்றடையச் செய்யக்கூடிய செல்லாக்கைக் கொண்டிருந்தவர்களும் இதனுடன் இணைந்து #ResponsibleMe என்பதை பிரபல்யப்படுத்தியிருந்தனர்.

நீண்ட கால அடிப்படையிலான தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தவிர்ப்பு முறைகளை முன்னெடுப்பதற்கு ஒவ்வொருவரும் தனித்தனியான முறையில் பொறுப்பேற்று இயங்குவதற்கு வங்கி மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றி கவனம் செலுத்தியிருந்தது. பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், இந்தத் தகவலை மக்கள் மத்தியில் பரவலடையச் செய்வதற்காக மெய்நிகர் ஊடக தகவலை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டது. டிஜிட்டல் பகுதியில் செயலில் இருக்கும் ஊடகவியலாளர்களை ஈடுபடுத்தியிருந்தது. சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் பங்காண்மையுடன் இந்த விடயம் தொடர்பாக நேர்காணல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகளுக்கான உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “#ResponsibleMe பிரச்சாரத் திட்டம் என்பது உரிய காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. செலான் வங்கி தனது வழமையான வியாபாரச் செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று, சமூகத்தில் ஒன்றிணைந்து தொற்றுப் பரவலிலிருந்து விடுபடுவதற்கான தேவையையும், எம் ஒவ்வொருவருக்கு மத்தியில் காணப்படும் பொறுப்புகளை உணர்த்துவதிலும் முக்கிய பங்காற்றியிருந்தது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதனூடாக மாத்திரமே எல்லோராலும் சாதாரணமாக இயங்கக்கூடியதாக இருந்தது.” என்றார்.

“தொற்றுப் பரவலுக்கு மத்தியில், இந்தத் திட்டத்தை பாரிய மட்டத்தில் முன்னெடுப்பது என்பது இலகுவான காரியமாக அமைந்திருக்கவில்லை. உற்பத்தித்திறன் மற்றும் குழுநிலைச் செயற்பாடு போன்றவற்றை பாதிக்கும் சில காரணிகள் காணப்பட்ட போதிலும், இந்தத் திட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும், தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தியிருந்தனர். Boutique Agency Network, Third Shift மற்றும் Ogilvy PR போன்ற முகவர் பங்காளர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவின்றி #ResponsibleMe என்பதை முன்னெடுத்திருக்க முடியாது. இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் போது சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்திலிருந்து எமக்கு கிடைத்திருந்த ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். ஒரு நபரின் செயற்பாடுகளுக்கு பிரத்தியேகமான பொறுப்பை ஏற்கச் செய்து, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை வெற்றியளித்திருந்தது. என Silver Dragon பற்றி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .