S.Sekar / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், 2022 ஆம் ஆண்டின் Pinnacals ஸ்ரீ லங்கா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதனூடாக, இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்ற ஒரே காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறை மற்றும் தொழிற்துறையில் பேணி வரும் சேவைச் சிறப்பு ஆகியவற்றுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விருதுகளை வழங்கும் அமைப்பான MUGP Award Organisation இனால், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தொடர்பான விவரமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த விருதுக்கான வெற்றியாளராக தெரிவு செய்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதை வெற்றியீட்டியுள்ளமைக்காக நாம் பெருமை கொள்கின்றோம். எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த விருது வெளிப்படுத்துகின்றது. யூனியன் அஷ்யூரன்ஸ் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவரின் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பை இந்த விருது உறுதி செய்வதுடன், எமது பாதுகாப்பின் கீழ் இலங்கையர்களின் வாழ்க்கையை பாதுகாத்திடும் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது.” என்றார்.
சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் பிரகாரம், ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக யூனியன் அஷ்யூரன்ஸ் கௌரவிக்கப்பட்டிருந்தமைக்காக நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களை எவ்வாறு உணரச் செய்கின்றது என்பதன் அடிப்படையில் வர்த்தக நாமமொன்றின் உண்மையான பெறுமதி தங்கியுள்ளது. வாழ்க்கைமுறைகள், உறவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பாதுகாப்பதனூடாக இலங்கையரின் கனவுகளுக்கு வலுவூட்டுவது எனும் வர்த்தக நாம நோக்கத்துக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் வழிநடத்தப்படுகின்றது. நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்தும் வகையில் வர்த்தக நாமக் கட்டியெழுப்பும் தந்திரோபாய செயற்பாடுகள் அமைந்திருப்பதுடன், அவர்களுடன் ஈடுபாட்டைப் பேணுவதில் கவனம் செலுத்துவதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “நிறுவனத்தின் புரட்சிகரமான டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் என்பது வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளின் பிரதான செயற்படுத்தல் காரணியாக அமைந்துள்ளது. இலங்கையில் காணப்படும் தூர நோக்குடைய ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர் எனும் வகையில், எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவைகளை பெற்றுக் கொடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறை மற்றும் சேவைச் சிறப்பு போன்ற நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு, நிறுவனத்தின் டிஜிட்டல் தந்திரோபாயம் புதிய முகப்பை வழங்கியுள்ளது. நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் செயற்திட்டங்களில் ஒரு அங்கமான Clicklife App இனூடாக ஆயுள் காப்புறுதியை வாடிக்கையாளருக்கு மிக அருகாமையி்ல் கொண்டு வந்துள்ளது. சந்தையில் பிரவேசித்திருந்த முதலாவது பரிபூரண app ஆக அமைந்திருப்பதுடன், இலங்கையில் ஆயுள் காப்புறுதி சேவை வழங்கலில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு பகுதியிலிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு தமது காப்புறுதிகளை சௌகரியமாக நிர்வகித்துக் கொள்ளும் வசதியை வழங்குவதுடன், உடற்தகைமை சவால்கள் மற்றும் வெகுமதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் பங்களிப்பு வழங்குகின்றது.
10 minute ago
27 minute ago
41 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
41 minute ago
57 minute ago