2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

UnionPay இன்டர்நஷனல் உடன் mCash கைகோர்ப்பு

S.Sekar   / 2021 ஜூன் 21 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL இன் மொபைல் பணக் கட்டமைப்பான mCash, நாட்டின் இலத்திரனியல் கொடுப்பனவு கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையில், UnionPay இன்டர்நஷனல் உடன் கைகோர்த்துள்ளது. இதனூடாக SLT-MOBITEL இலங்கையில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கள் செயற்படுத்தலை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த இணைந்த நடவடிக்கையினூடாக, mCash மற்றும் UnionPay இன்டர்நஷனலின் பயன்பாட்டை மேம்படுத்தும் என்பதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த mCash வாடிக்கையாளர்கள் மற்றும் mCash விற்பனையகங்களுக்கு நவீன தொழில்நுட்ப மேம்படுத்தல்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மேலும், இந்தப் பங்காண்மையினூடாக, UnionPay இன்டர்நஷனலின் சேவைகளை 25000க்கும் அதிகமான mCash வலையமைப்புக்கு வழங்கி, அவர்களின் டிஜிட்டல் ஆற்றல்களுக்கு வலுச்சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த அணுகல் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சௌகரியத்தை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது. முன்னணி மொபைல் பணக் கட்டமைப்பான mCash, உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளதுடன், அதற்காக தந்திரோபாய பங்காண்மைகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளது. இதனூடாக பணப் பாவனை குறைந்த டிஜிட்டல் உள்ளடக்கமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களுடன் mCash பணியாற்றி, வேகமான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் மிக்க மொபைல் நிதிச் சேவைகளை வழங்குகின்றது. மேலும், mCash ஊடாக பண வைப்புகள், மீளப் பெறுகைகள், பணத்தை அனுப்புதல் மற்றும் பெற்றுக் கொள்ளல், கட்டணப் பட்டியல் மற்றும் கல்வியக கொடுப்பனவுகள், சொப்பிங், Lanka QR கொடுப்பனவுகள், ஒன்லைன் கொடுப்பனவுகள், நலன்புரி கொடுப்பனவுகள், டிஜிட்டல் நிலையான ஆணைகள் மற்றும் துரித B2B வியாபாரத் தீர்வுகள் போன்ற பரந்தளவு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் குறுகிய காலத்தினுள் mCash பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கையின் டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான mCash இன் அர்ப்பணிப்புக்கு அதன் அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்கள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாழ்க்கை முறைக்கு பொருத்தமான வகையில் mCash அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .