2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

Vision Care தைப்பொங்கலுக்காக விசேட விலைக்கழிவுகள்

S.Sekar   / 2023 ஜனவரி 20 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்பார்வை சீராக்கல் தீர்வுகளை வழங்கும் Vision Care, தைப்பொங்கல் பண்டிகையையொட்டி விசேட இலவச கண் பரிசோதனை மற்றும் விசேட விலைக்கழிவுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக மூக்குக் கண்ணாடி பிரேம்களுக்கு இவ்விசேட விலைக்கழிவுகள் வழங்கப்படுகின்றன.

 

கட்டுப்படியான விலையில் Vision Care தமது தெரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும் Vision Care மூக்குக் கண்ணாடி பிரேம்களுக்கு 11% விலைக் கழிவினை வழங்குவதுடன் இலவச கண் பரிசோதனையையும் வழங்குகிறது. இதன் மூலம் தைப்பொங்கலை மகிழ்ச்சியாக உங்கள் அன்புக்குடையவர்களுடன் கொண்டாடிட Vision Care உதவுகிறது.

2023 ஜனவரி 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும் இச்சலுகையை அனுபவித்திட நீங்களும் வெள்ளவத்தை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் யாழ் ஆகிய இடங்களில் அமைந்துள்ள Vision Care காட்சியறைக்கு வருகை தந்திடுங்கள். நியாயமான விலையில் கிடைக்கும் பல்வேறுபட்ட வடிவங்கள், நிறங்கள் மற்றும் வடிவமைப்புக்களில் பாரிய தெரிவுகளைக் கொண்டுள்ள மூக்குக் கண்ணாடி வர்த்தக நாமங்களை கொள்வனவு செய்திடுங்கள். டின்டட் (Tint) f pளாஸ்களுடன் சிறுவர், ஆடவர் மற்றும் மகளிருக்கான அழகிய நேர்த்தியான designer brands எனும் Ray Ban, Vogue, Emperor Armani, Polaroid, Vintage, Polarsun, Carrera, Michael Kors, Prada, Bvlgari, Coach, Oakley Gucci மற்றும் Porsche என்பவற்றுடன் மேலும் பலவற்றைக் கொண்டுள்ளது.

அனைத்து Vision Care கிளைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கண்பார்வை தொடர்பான பரிசோதனைகளை இலகுவாக செய்து கொள்ளவும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளவும் வழிவகுக்கிறது. Vision Care இன் நிபுணத்துவம் பெற்ற (optometrists) ஒப்டோமெட்ரிஸ்ட்கள், கண் பரிசோதனைகளை மேற்கொண்டு, குறைப்பாட்டைக் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை வழங்கிட, அதிநவீன உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான கண் பார்வையை பராமரிக்கக்கூடியதுடன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உயர்தர கண் பரிசோதனைகள், மூக்குக் கண்ணாடிகள், சன்கிளாஸ்கள், கண்டக்ட் லென்ஸ்கள் மற்றும் கண் சத்திரசிகிச்சை நிபுணர்களின் ஆலோசனை வழங்குதல் போன்றவை மூலம் இலங்கையின் கண் பார்வை பராமரிப்புத்துறையில் தொழில்நுட்ப ரீதியான புரட்சியை மேற்கொள்வதில் Vision Care முன்னணி வகிக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தமது அனைத்து கிளைகளிலும் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றுக்கான பிரேம்களுக்கான உலகளாவிய வர்த்தக நாமங்களின் பரந்த தெரிவுகளையும் தம்மகத்தேக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .