2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

நாய்களையும் விட்டுவைக்காத சீனர்கள்

Ilango Bharathy   / 2021 ஜூன் 27 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் சீனாவில் நாய் இறைச்சிப் பண்டிகைக்காக டசின் கணக்கில் கொண்டுசெல்லப்பட்ட 70 நாய்களை, விலங்குகளைப் பாதுகாக்கும்  குழுவொன்று அண்மையில்  மீட்டுள்ளது.

குறித்த சிறிய  நாய்கள் கூடுகளில் அடைக்கப்பட்டு  வாகனமொன்றில்  சீனாவின் யுலின் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டபோதே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது அவ்வாகனத்தில் இருந்த பல நாய்களுக்கு நோய்த்தொற்றுக் காணப்பட்டதாகவும், அதில் சில நாய்கள் திருடப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாய் இறைச்சி உண்ணும் பழக்கமானது ஆசியாவின் பல பகுதிகளில் நூற்றாண்டுகால பழைமையான வழக்கமாக இருக்கும் அதேவேளையில் யுலின் நாய் இறைச்சி பண்டிகை 2009ஆம் ஆண்டு கால பகுதி முதலே ஆரம்பமானது.

சில சமூகங்களில் நாய் இறைச்சி உண்ணும் வழக்கம் பிரபலமாக இருந்தபோதிலும் சீனாவிலும், யுலினிலும் உள்ள பெரும்பாலான மக்கள் அதனை சாப்பிட்டது கிடையாது என்றும், இப்பண்டிகையை தாம் ஆதரிக்கவில்லையென்றும் தெரிவித்தனர்.

சர்வதேச மனிதாபிமான சங்கத்துக்கான சீன கொள்கை நிபுணர் டொக்டர் பீட்டர் லீ இதுபற்றிக் கூறுகையில் புதிய தலைமுறையினர் இத்தகைய செயல்களை பலமாக எதிர்ப்பதாகக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .